
பகவான் இராமரை அவதூறாகப் பேசியுள்ள கவிஞர் வைரமுத்துக்குப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து பகவான் இராமரை அவதூறாகப் பேசியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆழ்வார்கள் ஆய்வு மையம்” நிறுவி வைணவப் பக்தியைப் பரப்புவதாகக் கூறும் ஜெகத்ரட்சகனும், இராமர் கோவில் கட்டுவதற்காக நிதி கொடுத்தோமெனப் பெருமையாகக் கூறும் முதலமைச்சர் ஸ்டாலினும் வைரமுத்தின் இத்தகைய இந்துவிரோதப் போக்கை ஏற்றுக்கொள்கிறார்களா? என்று நாகேந்திரன் வினவியுள்ளார்.
“மத ஒற்றுமை” குறித்து மேடைக்கு மேடை முழங்கும் திமுகவினர் வைரமுத்துக்கு இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று வினவியுள்ளார். அவதூறான கருத்துகளைக் கூறியதற்குப் பொதுவெளியில் வைரமுத்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.



