56 ஆயிரம் பாகிஸ்தான் பிச்சைக்காரர்களை கடத்த முடிவு.!

சவுதி அரேபியாவில் இருந்து 56 ஆயிரம் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிச்சைக்காரர்களை நாடு கடத்த அந்த நாடு முடிவு செய்துள்ளது. மொத்தம் 66,154 பாகிஸ்தான் நட்டைச் சேர்ந்த பிச்சைக்காரர்கள் சவுதியை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது.
சவுதி அரேபியா மத நடவடிக்கைகளுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ‘அந்த நாட்டில் உம்ரா மற்றும் ஹஜ் பயணங்கள் மேற்கொள்பவர்கள் பரவலாக பிச்சை எடுப்பதாக தெரிவித்துள்ளது.
மெதீனா, மெக்கா புனித நகரங்களிலும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிச்சை எடுப்பவர்கள் எங்கும் நிறைந்து காணப்படுகின்றனர். மேலும், பல நாடுகளில் இருந்து புனித பயணம் மேற்கொள்ளும் மக்களையும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள் பணம் கேட்டு நச்சரிக்கின்றனர்.
இதையடுத்து, 56 ஆயிரம் பேரை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை பாகிஸ்தானில் இருந்து வெளியாகும்’ தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன்’ பத்திரிகை செய்தியாக  வெளியிட்டுள்ளது. சமீபத்தில், பாகிஸ்தானை சேர்ந்த பெரும்பாலான பயணிகளுக்கு யு.ஏ.ஈ நாடு விசா மறுத்தது குறிப்பிடத்தக்கது.
இவர்கள், அந்த நாட்டில் வந்து பிச்சை எடுப்பதாகவும், குற்றச் செயலில் ஈடுபடுவதாகம் யு.ஏ.ஈ குற்றம் சாட்டியுள்ளது. மேற்காசிய நாடுகளான கத்தார், அமீரகம், பஹரைன் மற்றும் மேற்காசியா மற்றும்  ஐரோப்பிய எல்லையையொட்டியுள்ள அசர்பைஜான் நாட்டிலும் கடந்த 2014ம் ஆண்டு பிச்சை எடுத்து பிடிபட்டவர்களில் 90 சதவிகிதம் பேர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *