
இந்தியாவின் விவசாய பொருட்கள் மீது, நூறு சதவீதம் வரை, வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக, டொனால்ட்-டிரம்ப் பதவி ஏற்ற பிறகு, அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். கனடா, மெக்சிகோ, நாடுகளுக்கு 25 சதவீத கூடுதல் வரியும், சீனாவுக்கு 10 சதவீத கூடுதல் வரியும் விதித்து உத்தரவிட்டார். இந்தநிலையில், இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிக்க, டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின்-லீவிட் கூறும்போது, பரஸ்பர வரிகளில் எந்த விலக்குகளும் இருக்காது எனவும், பரஸ்பர வரி கட்டண விவரத்தை அறிவிக்க டிரம்ப் தயராகி வருகிறார் எனவும், இதனை செயல்படுத்துவதில் டொனல்ட்-டிரம்ப் உறுதியாக இருக்கிறார் என தெரிவித்தார். இதனிடையே, பரஸ்பர வரிகளை விதிக்கும் டொனால்ட் டிரம்பின் திட்டத்தால், இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள்தான், அதிக ஆபத்துகளை சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா உள்ளிட்ட 15 நாடுகள் கடுமையான விளைவுகளை சந்திக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி, இந்தியா உள்ளிட்ட 15 நாடுகள் கடுமையான விளைவுகளை சந்திக்கும் நிலையில் உள்ளன. ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பாக அலுமினியம், இரும்பு மீது அதிக வரியை விதித்திருக்கிறார்.மருந்துகள், மின்சார பொருள்கள் மீதும் கடுமையான வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆட்டோமொபைல்ஸ் மீதான வரிவிதிப்பு வரும் 4 ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்படையும் நாடுகள் வருமாறு, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், மெக்சிகோ ,வியட்நாம், அயர்லாந்து ,ஜெர்மனி ,தைவான், ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் அடங்கும்.


