
அமெரிக்காவின் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் விற்பனையகத்தை மும்பையில் திறந்துள்ளது.
மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் மேக்கர் மேக்சிட்டி மாலில் டெஸ்டா மின்சாரக் கார்கள் காட்சி மற்றும் விற்பனையகம் திறக்கப்பட்டுள்ளது.
டெஸ்லா நிறுவனம் ஜூலையில் இந்தியாவில் தனது முதல் விற்பனையகத்தைத் தொடங்க உள்ளதாக ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதே நேரத்தில் மத்தியக் கனரகத் தொழில்துறை அமைச்சர் குமரசாமி, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது கார்களைத் தயாரிக்க விரும்பவில்லை என்றும், கார் விற்பனையகத்தைத் தொடங்குவதிலேயே ஆர்வமாக உள்ளதாகவும் கூறியிருந்தார்.
மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் டெஸ்லா விற்பனைக் காட்சியகத் திறப்பு விழாவில் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், டெஸ்லா நிறுவனம் சரியான மாநிலத்தில் சரியான நகரத்தைத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.


