Colifornia : சுபான்சு சுக்லா உள்ளிட்ட நால்வர் புவிக்குத் திரும்ப தயார்நிலை..!

Advertisements

இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லா உள்ளிட்ட நால்வர் புவிக்குத் திரும்பும் விண்கலம் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்குக் கலிபோர்னியக் கடற்கரையில் தரையிறங்க உள்ளது.

இந்திய வீரர் சுபான்சு சுக்லா, போலந்து, ஹங்கேரி, அமெரிக்க வீரர்கள் என மொத்தம் நான்க பேர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் ஜூன் 25ஆம் நாள் விண்வெளிக்குச் சென்றனர். அவர்கள் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்தனர்.

22 நாள் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து விட்டுப் அதிலிருந்து பிரிந்த டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் இன்று புவிக்குத் திரும்புகின்றனர். இந்த விண்கலம் புவியை நோக்கிப் பயணித்து வருகிறது. 22 மணி நேரப் பயணத்துக்குப் பின் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் மூன்று மணிக்கு அமெரிக்காவின் கலிபோர்னியக் கடற்கரையில் சாண்டியகோ என்னுமிடத்தில் டிராகன் விண்கலம் தரையிங்க உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *