
அமெரிக்க ஏற்றுமதி இரு மடங்காகும் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று, திருப்பூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில், துணை குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின்னர், தனது சொந்த ஊரான திருப்பூருக்கு நேற்று வருகை தந்த, துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு, தாராபுரம் சாலையில் உள்ள வேலாயுதசாமி திருமண மண்டபத்தில், திருப்பூர் மக்கள் மன்றத்தின் அமைப்பு சார்பில், பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில், பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், திருப்பூர் தொழில் துறையினர், பல்வேறு கட்சியினர் மற்றும் விவசாய அமைப்பினர் என ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவில், துணை குடியரசுத் தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணன் உரையாற்றினார்.
அப்போது, தி.மு.க, அ.தி.மு.க, மற்றும் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஆகியோருடனும் இணைந்து பணியாற்றியுள்ளேன் என்று தெரிவித்தார். மேலும், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், சி.பி.ஆர். தோற்கப் போகிறார், நரேந்திரமோடி தோற்கப் போகிறார் என தமிழக சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டனர்.
அந்த நேரத்தில் இறை நம்பிக்கை தான் என்னை வழிநடத்தியது என்றும், வெற்றியையும், தோல்வியையும் சந்தித்தாலும், உழைப்பை நிறுத்தாத தலைவர் கலைஞர் கருணாநிதி என்றும், சிறந்த நுண்ணறிவு கொண்ட ஆளுமை மிக்க தலைவர் ஜெயலலிதா என்றும் தெரிவித்த அவர், அமெரிக்க ஏற்றுமதி இரு மடங்காகும் என்றும், நம்பிக்கை இழக்க வேண்டாம் என்றும் துணை குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


