Advertisements

மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் பாதுகாப்பு ஊழியர் அஜித்குமார் போலீஸ்காரர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது போல் நாள்தோறும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் படுகொலைக்கு மூல காரணமாக விளங்கிய டாக்டர் நிகிதா.. முதலில் மருத்துவ டாக்டர் என்று கருதப்பட்ட நிலையில் முனைவர் பட்டம் பெற்ற கல்லூரி பேராசிரியர் என்று பின்னர் தெரியவந்தது.
தொடக்கத்தில் கல்யாண ராணியாகத் திருமண மோசடியில் தொடங்கி தொடர்ந்து வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கான பண மோசடியென நீண்டு இப்போது 500 ரூபாய் பிரச்சனையில் அப்பாவி இளைஞன் அஜித்குமாரின் படுகொலையில் போய் முடிந்திருக்கிறது. இதற்கிடையில் இந்த மோசடிகளுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல் தான் வேலை பார்த்த (முத்தையா அரசினர் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியை மற்றும் துறைத்தலைவர்) கல்லூரியில் மாணவிகளை நிர்பந்தப்படுத்தி இருக்கலாம் என்ற புதிய தகவலும் வெளியாகி இருக்கிறது. அருப்புக்கோட்டை மகளிர் பேராசிரியை நிர்மலா தேவியை அனைவருக்கும் நினைவு இருக்கலாம். இவர் மாணவிகளை மூளை சலவை செய்து உயர் அதிகாரிகளுக்கு விருந்து படைத்த புகாரியில் கைதாகி 10 ஆண்டுகள் கடுங்காவல் தேவி தண்டனை அனுபவித்து வருகிறார்.
நிகிதாவின் முந்தைய கால மோசடி வழக்குகளில் அவருக்கு வழக்குரைஞராக ஆஜரான முரட்டு முட்டு என அழைக்கப்படும் அரசியல்வாதி பசும்பொன் பாண்டியன் ஆஜராகி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதே பசும்பொன் பாண்டியன் தான் முன்பு பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிரான வழக்கில் ஆஜராகி அவருக்கு ஜாமீன் ஜாமீன் வாங்கி கொடுத்ததும் அம்பலமாகி இருக்கிறது.
அஜித் குமார் படுகொலைக்குப் பிறகு ஊர் ஊராகக் காரில் பயணம் செய்த நிகிதா கல்லூரிக்குச் சென்று 19 நாட்கள் மருத்துவ விடுப்பு எழுதிக் கொடுத்துவிட்டு தலை மறைவாகிவிட்டார். இடையில் மாவட்ட நீதிபதி விசாரணைக்கு மட்டும் ஆஜராக இருந்தார். அதில் என்ன வாக்குமூலம் அவர் கொடுத்திருந்தார் என்பது இன்னும் வெளியாகவில்லை. சிபிஐ விசாரணை தொடங்கியிருந்த நிலையில் இன்னைக்கு தான் தலைமுறைவாகிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை உலுக்கிய அஜித்குமார் படுகொலைக்குப் பிறகு கல்லூரிக்கு அவர் சென்றபோது மாணவிகள் நிகிதாவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. அத்துடன் மாவட்ட கலெக்டர் இடமும் மாணவிகள் புகார் கொடுத்து விசாரணை நடந்ததாகவும் கூறப்படுகிறது.
ஏராளமான பத்திரிகையாளர் படையெடுத்ததாலும் மாணவிகள் கொந்தளிப்பான மனநிலையில் இருந்ததாலும் நிகிதா கல்லூரியின் பின்வாசல் வழியாக யாருக்கும் தெரியாமல் வெளியேறித் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிரான பாலியல் புகார்போல் நிகிதா மீதும் புகார் எழுந்திருப்பது புதிய கோணத்தில் பார்க்கப்படுகிறது.
புதிதாக விசாரணை தொடங்கி இருக்கும் சிபிஐ இது பற்றியும் விசாரணை நடத்த வேண்டும் என்று youtube ஊடகவியலாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்கட்டும்! நிகிதா விவகாரத்தில் அவருடைய தந்தை உதவி கலெக்டராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் தாயார் அரசு பணியில் அதாவது ஆசிரியை பணியில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது. அவருடைய கல்யாண லீலை வரதட்சணை கொடுமை மோசடி மற்றும் வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் பண மோசடி செய்தது கடந்த 2001 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி இருக்கிறது.
அவருக்கு 21 வயது ஆகியிருந்தபோது பெற்றோர் திருமண ஏற்பாடுகளைச் செய்து இருக்கிறார்கள். முதலில் பார்த்த மணமகன் சிங்கப்பூரை சேர்ந்தவர் தமிழர் ரவி என்கிற ரவீந்திரன். இவருடைய நிச்சயதார்த்த விழா தமிழ்நாட்டில் மிகவும் ஆடம்பரமாக நடந்துள்ளது. மாப்பிள்ளை வீட்டார் 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார்கள்.
ஆனால் நிச்சயதார்த்தத்திற்கு பிறகு சிங்கப்பூர் திரும்பிய தொழிலதிபருக்கு எதிராக நிகிதா முதல் முறையாகப் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். நகை பணம் வரதட்சணை கேட்பதாகக் குற்றம் சாட்டி இந்தப் புகாரை அவர் கூறியிருந்தார். அதன்பிறகு இந்தப் புகார் எப்படி முடித்து வைக்கப்பட்டது என்பதை பற்றிய விவரம் தெரியவில்லை. அடுத்து அவரைத் திருமணம் செய்த அரசியல் பிரமுகர் திருமாறன் ஜி திருமணத்திற்கு பிறகு முதல் இரவைக் கூட நடத்தவில்லை. அதற்கு முன்பாகவே மணமகன் வீட்டார் கன்னியிடம் 200 பவுன் நகைவரை வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியதாகப் புகார் கூறி ஓடிப் போய்விட்டார். அவர்களுக்கிடையே விவாகரத்து வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் தன்னைவிட வயது குறைவான சக்தி கணேஷ் என்பவருடன் 2008 ஆம் ஆண்டில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நிகிதா நிர்பந்தம் செய்திருக்கிறார். அவரிடமும் பண மோசடி செய்ய முயன்றிருக்கிறார் நிகிதா.அப்போது விவாகரத்து வழக்கு நடைபெற்று வருவதால் அதைக் காரணம் காட்டி இந்த விவகாரம் அத்துடன் முடித்து வைக்கப்பட்டது. நான்காவதாகப் பாண்டி என்பவருடன் திருமணம் நடந்ததாகவும் அவருக்கு எதிராகவும் நிகிதா வரதட்சணை புகார் கூறியதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதைத்தொடர்ந்து தான் திருமண மோசடிகளை விட்டுவிட்டு வேலை வாங்கித் தருவதாகப் புதிய மோசடியைத் தொடங்கி இருக்கிறார் நீங்கிதா. தன்னுடைய பேராசிரியர் மற்றும் தனது மாணவர்கள் பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாகப் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகப் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து புகார் கூறி வருகிறார்கள்.
இந்த வழக்குகளில் கட்டப்பஞ்சாயத்து செய்து முடித்து வைத்தவரே இந்தப் பசும்பொன் பாண்டியன் தான் என்றும் கூறப்படுகிறது. நிர்மலா தேவி நிகிதா ஆகிய இரு பேராசிரியர்களுக்கும் வழக்குரைஞராகப் பசும்பொன் பாண்டியன் செயல்பட்டு இருப்பதால் நிகிதாவுக்கு எதிராகவும் பாலியல் புகார் புதிதாகக் கூறப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
இந்த நிலையில் அரசன் அன்று கொல்வான் இறைவன் நின்று கொல்வான் என்பது போல் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு தனக்கு இருந்த மேலிடச் செல்வாக்கு காரணமாகத் தப்பி வந்த நிகிதா இப்போது தர்ம தேவதை நீதி தேவதை என்று அழைக்கப்படும் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் வளாகத்திலேயே படுகொலையை அரங்கேற்றம் செய்யப்பட்டு இருப்பதால் வீறு கொண்டு எழுந்த சாமுண்டி பத்ரகாளி அம்மன் அவரை வசமாகச் சிக்க வைத்து உரிய தண்டனை வாங்கிக் கொடுத்தே தீருவார் என்பதை பத்திரகாளி அம்மன் பக்தர்கள் அடித்துக் கூறுகிறார்கள்.
சிபிஐ விசாரணை தொடங்கியதும் மேலும் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.
சிறப்புச் செய்தியாளர் : செந்தூர்பாண்டியன்
Advertisements



