Chennai Rains:சென்னையில் காலை முதலே வெளுத்து வாங்கும் கனமழை..!

Advertisements

சென்னையில் காலை முதலே கனமழை பெய்ய துவங்கி இருக்கிறது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அண்ணாசாலை, எழும்பூர், புரசைவாக்கம், புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வந்த நிலையில், தற்போது சென்னையின் பல இடங்களில் கனமழை பெய்ய துவங்கியுள்ளது.

இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்ததை அடுத்து, சென்னை உள்பட நான்கு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சென்னையில் காலை முதலே கனமழை பெய்ய துவங்கி இருக்கிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. அதேபோல், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அலுவலகம் செல்வோர், வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *