Sivagangai : அஜித் குமார் கொலை: நகை திருட்டு பொய்யா? திடுக்கிடும் திருப்பங்கள்..!

Advertisements
கோவில் காவலாளி அஜித்குமார் படுகொலை சம்பவத்தில் நகை திருட்டுப் போனதாக குற்றம் சாட்டிய நிகிதா யார் ?என்ன நடந்தது? என்று திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளி வந்துள்ளன. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளி காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டார் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது
மதுரையைச் சேர்ந்த நிகிதா என்பவர் தனது தாயாருடன் காரில் கோவிலுக்கு வந்த போது 10 பவுண் நகை மற்றும் 2500 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை காரின் பின் சீட்டில் வைத்து விட்டு சாமி கும்பிட வந்ததாகவும் பின்னர் அந்த நகை தொலைந்து விட்டதாகவும் காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார் . இது குறித்த விசாரணையின் பெயரில்தான் கோவில் காவலாளி அஜித் குமார் அடித்துக் கொல்லப்பட்டார்.
சம்பவம் நடந்தபோது எனது காரை கார் பார்க்கிங்கில் சரியாக நிறுத்தும்படி காவலாளி அஜித் குமாரிடம் சாவியை கொடுத்தேன் என்று குறிப்பிட்டு இருந்தார் நிகிதா . இது பற்றி அஜித் குமார் கூறும் பொழுது எனக்கு கார் ஓட்ட தெரியாததால் அந்த சாவியை நண்பர்களிடம் ஒப்படைத்தேன் அவர்கள் தான் காரை ஓட்டி வந்து பார்க்கிங்கில் நிறுத்தினார்கள் என்று கூறினார் . அஜித்குமார் நண்பர்களை அழைத்து போலீசார் விசாரணை செய்த போது நாங்கள் நகை எதுவும் பார்க்கவில்லை என்று தெரிவித்து விட்டனர்
இந்த சூழ்நிலையில்தான் அஜித் குமாரை மரண அடி அடித்ததில் அவர் இறந்து போய்விட்டார் . தற்பொழுது யார் இந்த நிகிதா? உண்மையிலேயே நகை திருடு போனதா? என்ற திடுக்கிடும் திருப்புமுனை கேள்விகள் எழுந்துள்ளன . மதுரை திருமங்கலம் அருகில் உள்ள ஆலம்பட்டி ஜேபி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஜெயபெருமாள் இவரது மனைவி சிவகாமி அம்மாள் இவரது மகன் கவியரசு மகள் நிகிதா.
முன்னதாக நிகிதா டாக்டருக்கு படித்தவர் என்று சொல்லி வந்த நிலையில் இப்பொழுது அவர் முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராக பணிபுரிந்து வருவது தெரியவந்துள்ளது
திண்டுக்கல்லில் உள்ள அரசு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார் . நிகிதா ஏற்கனவே பண மோசடியில் ஈடுபட்டவர் என்ற பரபரப்பு தகவல்கள் இப்போது வெளிவந்துள்ளன. கடந்த 2011 ம் ஆண்டு மதுரை திருமங்கலம் அருகில் உள்ள பச்சைக் கொப்பம்பட்டியை சேர்ந்த ராஜாங்கம் தெய்வம் வினோத்குமார் ஆகிய மூன்று பேர் அப்போதைய மதுரை போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர்
அதில் நிகிதாவின் சகோதரர் கவியரசு தனக்கு துணை முதல்வரின் பி ஏ  தெரிந்தவர் அவர் மூலம் தெய்வத்துக்கு ஆசிரியர் வாங்கி கொடுக்க 19 லட்சமும் வினோத்குமாருக்கு விஏஓ வேலை வாங்கி தருவதற்கு ஏழு லட்சமும் கொடுத்தால் 15 நாட்களில் வேலை வாங்கி தருகிறோம் என்று கூறினார் . நாங்களும் 16 லட்சம் ரூபாய் கொடுத்தோம் ஆனால்  வேலை வாங்கி தரவில்லை பணத்தையும் திருப்பித் தரவில்லை பணத்தை கேட்ட போது எங்களை மிரட்டினார் என்று கூறியுள்ளனர். இதன் பேரில் சிவகாமி அம்மாள் நிகிதா ஆகியோர் மீதும் போலீசார் மோசடி பழக்கு பதிவு செய்துள்ளனர் இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது
இதற்கிடையே நிகிதா கோவிலுக்கு வந்த போது அவரது தாயாரை வீல்சேரில் அழைத்து வரும்படி கோவில் காவலாளி அஜித் குமார் இடம் கேட்டுள்ளார் இதற்கு அஜித் குமார் கூலியாக 500 ரூபாய் கேட்டபோது 100 ரூபாய் தான் தர முடியும் என்று கூறியுள்ளார் மீண்டும் அஜித் குமார் வலியுறுத்தவே அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கடைசியில் 200 ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டு நிகிதாவின் தாயார் சிவகாமி அம்மாளை ஒரு வீல் சேரில் அஜித் குமார் அழைத்து வந்துள்ளார்
இதற்கிடையே நகை திருட்டு போனது தொடர்பாக நிகிதா காவல்துறையில் புகார் செய்த பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு போன் செய்து பேசியுள்ளார் இதன் பின்னர் அந்தப் பெண் போலீஸ் அதிகாரி உத்தரவின் பேரில்தான் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மானாமதுரை தனிப்படை பிரிவினர் கிளம்பிச் சென்று அஜித்குமாரிடம் அதிரடி விசாரணை மேற்கொண்டனர் என்பதும் தெரியவந்துள்ளது . இதற்கிடையே உண்மையிலேயே நகை திருட்டு போனதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது
நகை பணத்தை காரின் பின் சீட்டில் ஏன் வைக்க வேண்டும் பொதுவாக நகை பணத்தை பத்திரமாக வைப்பது என்றால் காரின் முன்புறம் பக்கம் உள்ள டேஷ் போர்டில் வைப்பார்கள் அது மட்டுமல்லாமல் காரில் நகை இருப்பது தெரிந்தும் கார் சாவியை வேறு ஒருவரிடம் கொடுத்தது ஏன் என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளன . இதற்கிடையே நிகிதாவும் அவரது தாயாரும் தாங்கள் வசித்து வரும் வீட்டுக்கதவை பூட்டிவிட்டு எங்கேயோ சென்று விட்டார்கள் தற்பொழுது அவர்களது வீடு பூட்டி கிடக்கிறது என்பதும் மர்மமாக இருக்கிறது
இதற்கிடையே மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே தேங்கல் பட்டியைச் சேர்ந்த ஒருவரிடம் கல்லூரியில் பேராசிரியர் பணி வாங்கி தருவதாக 25 லட்சம் ரூபாய்மோசடி செய்தார் என சிவகாமி அம்மாள் மற்றும் நிகிதா மீது ஏற்கனவே ஒரு வழக்கு பதிவாகியுள்ளதும் இப்போது வெளியே தெரிய வந்துள்ளது . இதனிடையே வருகிற ஆறாம் தேதி தமிழக வெற்றி கழகம் சார்பில் சென்னையில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன இந்த போராட்டத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார். மேலும் சுற்று மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சம் பேருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது என்பதும் முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *