Amaravathy Dam : இன்று முதல் நீர் திறந்து விட முதலமைச்சர் விஜய் உத்தரவு.!

அமராவதி அணையில் இருந்து இன்று முதல் நீர் திறந்து விட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து, நீர் திறந்து விட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.  இது தொடர்பாக அரசு செயலாளர்  அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிற்கிணங்க, தற்போது, எல்.நினோ பாதிப்பினால் மழைப் பொழிவு இல்லாததால் திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையின் ஆற்று மதகு வழியாக இன்று முதல் , 7 ஆம் தேதி வரை நீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதில், நாளொன்றுக்கு, வினாடிக்கு 1,000 அடி வீதம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.நீரின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில், மேலும் 4 நாட்களுக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம், அமராவதி அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து திறந்து விடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *