குளிருக்கு இதமா வெறும் டீ-யை விட பாதாம் டீ, பால் பெஸ்ட்…!

Advertisements

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல மாவட்டங்களில் நாள் முழுவதும் குளிர்ச்சியான வானிலை மாறியுள்ளது.

அதோடு மட்டுமல்ல அடுத்து வர உள்ள  டிசம்பர் மற்றும் ஜனவரி இரண்டு மாதமும் பனி, மழை குளிரில் நம்மை உரைய வைக்கப் போகிறது. மற்ற மாதங்களைவிட இது வித்யாசமான பலருக்கும் பிடித்தமான மாதமாகவும் இருக்கும்.

முக்கியமாகக் காலை, மாலை குளிருக்கு இதமாக டீ அருந்தி அரட்டையில் ஈடுபட செல்வது கிராமம் முதல் நகரம்வரை அதிகரிக்கும். அப்படி நாம் அருந்தும் தேநீரில் பாதாம் தேனீர், பாதாம் பால் குடிப்பதால் நம் உடலுக்குப் பல நன்மைகளை ஏற்படுத்தும்.

குளிர்காலத்திறக்கு ஏற்ற‌ இதமான சூட்டோடு உடல் எடை குறைப்பு, நோய் எதிர்ப்புச் சக்தி மேம்பட்டுப் பல நன்மைகளை அளிக்கும் இந்தப் பாதாமில் உள்ள மருத்துவ குணங்களைப் பார்க்கலாம்.

பாதாம் மற்ற அனைத்து பருப்பு வகைகளைவிட ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இந்தப் பாதாம் மனித உடலின் இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே இந்தப் பருவ மாற்றத்தில் பாதாம் மிகவும் முக்கியமானது, ஆரோக்கியமாக இருப்பது சாத்தியமாகும்.

உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால், இதயக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. அந்தக் கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க இந்த நட்ஸ் உதவுகிறது. கொலஸ்ட்ரால் மட்டுமல்ல. உடலில் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் பாதாம் குறிப்பிடத் தக்க பங்கு வகிக்கிறது.

கூடுதலாக, உடல் எடையைக் குறைக்க தொடர்ந்து டயட் அல்லது உடற்பயிற்சி செய்பவர்கள் அனைவருக்கும் பாதாம் பயனுள்ளதாக இருக்கும்.

குளிர்கால மனநிலையில், இந்தப் பாதாம் இதயத்தைக் காப்பது மட்டுமல்ல, மனித உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த பாதாமை 8 முதல் 80 வரை அளவோடு அனைவரும் சாப்பிடலாம்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *