
இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சகோதரர்கள் அனைவரும் ஒருதாய் வயிற்று பிள்ளையாய் ஒற்றுமையாய் வாழ வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், டக்கரம்மாள்புரத்தில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில், மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. இந்த, விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்திருந்தக் குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.
தொடர்ந்து, கிறிஸ்துமஸ் பரிசுகளைப் போல் உள்ள பெரியக் கேக்யை வெட்டி, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ உள்ளிட்ட பல்வேறு சமயத்தைச் சார்ந்தவர்களுக்கு ஊட்டினார். இதையடுத்து, மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, அவர், விழாவில் பேசியப் போது இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சகோதரர்கள் அனைவரும் ஒருதாய் வயிற்று பிள்ளையாய் ஒற்றுமையாய் வாழ வேண்டும் என்றும், அனைவரும் ஒருவர் மீது ஒருவர் அன்போடு இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


