Quarterly Exam Holidays: காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்னது என்ன?

Advertisements

Quarterly Exam Holidays 2024 Tamil Nadu: விடுமுறை நீட்டிப்பு குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாகும்.

பள்ளி மாணவர்களுக்குக் காலாண்டு விடுமுறை நீட்டிப்பது குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

காலாண்டு விடுமுறை எப்போது?
பள்ளி மாணவர்களுக்குச் செப்.28 முதல் அக்.2ஆம் தேதிவரை காலாண்டு விடுமுறை விடப்பட்டு, 3ஆம் தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அடுத்த நாள் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும். பின்னர் சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. எனவே அக்.6ஆம் தேதிவரை விடுமுறையை நீட்டிக்குமாறும் 7ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் காலாண்டு விடுமுறையை நீட்டிப்பது பற்றி ஆலோசனை நடத்தி வருவதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகளில் காலாண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விடுமுறை நீட்டிப்பு குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாகும். இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளரிடம் பேசி உள்ளேன்’’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *