சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டாரத்தில் காலை நேரத்தில் கடும் பனிமூட்டத்தால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டு மெதுவாகச் சென்றன.
கெங்கவல்லி, ஆனையம்பட்டி, கூடமலை, கொண்டையம்பள்ளி, பள்ளக்காடு, ஒதியத்தூர் ஆகிய ஊர்களில் காலை நேரத்தில் கடும் பனி மூட்டம் காணப்பட்டது. பனி மூட்டத்தால், சாலைகளில் சற்றுத் தொலைவுக்கு அப்பால் உள்ளதைக் கூடக் காண முடியாதபடி இருண்டு காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பகலில் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றனர். இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.



