Air India: இயக்குனர் பணி இடைநீக்கம்!

ஏர் – இந்தியா நிறுவன இயக்குனர் பணி இடைநீக்கம்! டிஜிசிஏ அதிரடி நடவடிக்கை…

ஏர் இந்தியா நிறுவனம் மேற்கொண்ட பரிசோதனையில் விபத்தைத் தடுக்கும் பொருட்டு தொழில் நுட்ப மற்றும் இயந்திரக் கோளாறுகளைச் சரி செய்யாமல் கிடப்பில் போட்டதே விபத்துக்கள் ஏற்பட காரணம் என்று தெரிய வந்ததை அடுத்து சிவில் ஏவியேஷன் இயக்குநர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

விபத்து தடுப்புக்கான முன்னேற்பாடுகளைச் சரியாகச் செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து சிவில் ஏவியேஷப் இயக்குநரிடம் விசாரணை நடை பெற்ற நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், விபத்து தடுப்பதற்கான இயந்திர கோளாறுகளைச் சரி செய்யும் பணியினைக் கவனிக்காமலும், பராமரிப்பும், செய்யாததை வானூர்தி வாட்ச் டாக்ஸ் டீம் தீவிரமாகப் பரிசோதித்தது. வானில் பயணிக்கும்போது ஏற்படும் தொழில் நுட்பக் கோளாறுபற்றி ஜூலை 25. மற்றும் 26 தேதிகளீல் ஆய்வு மேற்கொண்டது.

சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில குறிப்பிட்ட துறையில் பணியாற்றும் அதிகாரிகள், இயந்திரக் கோளாறு பற்றியும், அதைச் செப்பனிடுவது குறித்தும் ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை இதனால் தொழில்னுட்பக் கோளாறுகள் சரி செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்ததாகவும் தெரிவித்து, அதற்குத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இயக்குநர் பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *