Porter: பயணிகளின் உடைமைகளைத் தலையில் சுமந்து சென்ற ராகுல்!

Advertisements

சுமை தூக்கும் தொழிலாளி உடை அணிந்து, பயணிகளின் உடைமைகளை ராகுல் காந்தி சிறிது தூரம் தூக்கி சென்றார்…

புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி சமீப நாட்களாகப் பொது இடங்களுக்குச் சென்று, டிரைவர், விவசாயிகள், மெக்கானிக்குகள் போன்றோரைச் சந்தித்து அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றிக் கேட்டறிந்து வருகிறார்.

இந்தநிலையில், டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரெயில் நிலையத்திற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி திடீரெனச் சென்றார். அப்போது ரெயில் நிலையத்தில் பணிபுரியும் (போர்ட்டர்கள்) சுமை தூக்கும் தொழிலாளிகளை ராகுல் காந்தி சந்தித்து பேசினார். மேலும் சுமை தூக்கும் தொழிலாளிகளின் குறைகள், குடும்பச் சூழ்நிலைகுறித்து ராகுல் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து சுமை தூக்கும் தொழிலாளி உடை அணிந்து, பயணிகளின் உடைமைகளை ராகுல் காந்தி சிறிது தூரம் தூக்கி சென்றார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *