Air Canada: விமானி பணி நீக்கம்!

Advertisements

பாலஸ்தீன கொடியை அணிந்து வந்த விமானி.

ஏர் கனடா விமானத்தில் பாலஸ்தீன கொடியை  அணிந்து வந்த விமானி முஸ்தஃபா எஜ்ஜோ  உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இஸ்ரேலுக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் அவரைப் பணி நீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல்  வெளியாகியுள்ளது. மேலும் இவர்மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளதாகத் தி டோரண்டோ சன் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

முஸ்தஃபா எஜ்ஜோ விமானி தனது பணி நேரத்தின்போது இஸ்ரேலுக்கு எதிராகப் பாலஸ்தீன கொடியைத் தனது சட்டையில் அணிந்து வந்து வன்முறையைத் தூண்டுவதாக வாசகங்களையும் வெளியிட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *