Fishing suspension relief: நிவாரணம் வழங்கல்!

உயர்த்தப்பட்ட மீன்பிடி தலைக்கால நிவாரணத்தை பயனாளிகளுக்கு முதல்வர் ரங்கசாமி வழங்கித் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி அரசு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் ஆண்டுதோறும் குடும்பம் ஒன்றிற்க்கு வழங்கப்பட்டு வரும் மீன்பிடி தடைக்கால நிவாரணமானது நடப்பு (2023) ஆண்டு முதல் ரூ.5.500/-ஆக வழங்கப்பட்டு வந்த தொகையானது ரூ.6.500/- ஆக உயர்த்தப்பட்டு, மேற்படி தொகையானது முதற்கட்டமாக 18298 மீனவ குடும்பங்களுக்கு ரூ.11.89.37.000/- (ரூபாய் பதினோறு கோடியே எண்பத்தியொன்பது லட்சத்து முப்பத்தியேழு ஆயிரம் மட்டும்) கடந்த ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது.

மேற்படி, மீன்பிடி தடைகால நிவாரண தொகையானது இரண்டாவது கட்டமாகப் புதுவை பகுதியைச் சேர்ந்த 505 குடும்பங்களுக்கும். கரைக்கால் பகுதியைச் சேர்ந்த 438 குடும்பங்களுக்கும், மாஹே பகுதியைச் சேர்ந்த 9 குடும்பங்களுக்கும் மற்றும் ஏனாம் பகுதியைச் சேர்ந்த 58 குடும்பங்களுக்கும் ஆக மொத்தம் 1010 குடும்பங்களுக்குச் சுமார் ரூபாய் 65.65 லட்சம் இன்று  முதல் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தும் நிகழ்ச்சியினை சபாநாயகர் செல்வம்,  மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன்  முன்னிலையில் முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *