AIADMK Protest: மாற்று இடம் வழங்கக் கோரி போராட்டம்!

இடிக்கப்பட்ட 528 வீடுகளுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி தமிழக அரசைக் கண்டித்து ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் அதிமுக மேற்கு மாவட்ட கழக சார்பில் மேல்விஷாரம் பகுதியில் இடிக்கப்பட்ட 528 வீடுகளுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி தமிழக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராகத் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு சிறப்பு கண்டன உரையாற்றினார்.

ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல்விஷாரம் நகராட்சியில் உள்ள சாதிக் பாஷா நகர், கருணாநிதி நகர் மற்றும் எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 528 குடியிருப்புகளை வருவாய்த்துறையினர் இடித்து அப்புறப்படுத்தினர்.

ஆனால் அந்தப் பகுதியில் வசித்து வந்த இஸ்லாமிய பொதுமக்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரியும் இதுவரையில் மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்து பல்வேறு பகுதிகளிலிருந்து மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் பிற அணி சார்ந்த அதிமுக நிர்வாகிகள் இஸ்லாமிய பொதுமக்கள் என 2000-க்கும் மேற்பட்ட கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *