
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் போட்டியின் முதல் ஆட்டம், பொ்த் நகரில் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியாவிற்குச் சுற்றுப்பணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர்கள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளன. இந்நிலையில் பொ்த் நகரில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் தொடர் போட்டி இன்று தொடங்குகிறது.
இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தலைமையில், வீரர்கள் களமிறங்க உள்ளன. மேலும், இந்த போட்டியில் இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா விளையாட உள்ளனர்.
இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என குறிப்பிடத்தக்கது.




