பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 400 க்கும் மேற்பட்டோர் பலி.!

ஆப்கானிஸ்தானில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள உமர் போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் 400 க்கும் மேற்பட்டோர் உயிர்மாய்க்கப்பட்டதாகவும், 300 க்கும் மேற்பட்டோர்  காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

பின்னர் இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் முகமது நபி, ரஷீத்கான் உள்ளிட்டோர் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *