பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலில் 20 பேர் பலி..!

Advertisements

சர்வதேச சட்டங்களை மீறி எல்லை தாண்டி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான்  வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 20 பேர் உயிர் மாய்க்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தானில் தற்கொலை படைத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, இத்தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் ஆளும் தாலிபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச சட்டங்களை மீறி எல்லை தாண்டி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. தனது நாட்டின் உள்நாட்டுச் சவால்கள் மற்றும் பாதுகாப்புத் தோல்விகளை மறைக்கவே பாகிஸ்தான், இத்தகைய தாக்குதல்களை நடத்தியுள்ளது என்று கூறியுள்ளது. இதனிடையே, நாட்டின் நிலப்பரப்பையும் மக்களின் பாதுகாப்பையும் காப்பது தங்களின் பொறுப்பு” என்றும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *