12 காவல் உதவி ஆணையர்கள் இடமாற்றம்!
சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை: சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் விபரம் பின்வருமாறு;வேப்பேரி காவல் உதவி ஆணையராக இருந்த கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.காத்திருப்போர் பட்டியலில் இருந்த கலியன் சென்னை காவல்துறை பாதுகாப்பு பிரிவு உதவி ஆணையராக நியமனம்.
பிராங் டி.ரூபன் – போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ஆவடி காவல் ஆணையரகம். டி.ரமேஷ் – அரும்பாக்கம் காவல் உதவி ஆணையராக நியமனம். காத்திருப்போர் பட்டியலில் இருந்த புருஷோத்தமன் மடிப்பாக்கம் காவல் உதவி ஆணையராக நியமனம் பரத் – நீலாங்கரை காவல் உதவி ஆணையராக நியமனம்.
பாலகிருஷ்ண பிரபு- சென்னை மேற்கு பிரிவு போக்குவரத்து காவல் உதவி ஆணையராக நியமனம். ராஜா – சென்னை வேப்பேரி காவல் உதவி ஆணையராக நியமனம். தட்சணாமூர்த்தி – பூக்கடை காவல் உதவி ஆணையராக நியமனம். சரண்யா- சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையராக நியமனம். அருண் – கோயம்பேடு காவல் உதவி ஆணையராக நியமனம்.சுதர்சன் – தி.நகர் காவல் உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


