ADMK:கவர்னர் தேநீர் விருந்தில் பங்கேற்பதாக அறிவிப்பு!

நாளைக் கவர்னர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது

சென்னை:நாட்டின் 78வது சுதந்திர தினம் நாளைக் கொண்டாடப்படுகிறது.. சுதந்திர தின விழாவையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, கவர்னர் மாளிகையில் அனைத்து கட்சிகளுக்கும் தேநீர் விருந்து வைக்க உள்ளார் இந்தத் தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி, தி.மு.க., அ.தி.மு.க. , காங்கிரஸ், பா.ஜ.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்குக் கவர்னர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது.

கவர்னர் ஆர்.என். ரவியின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாகத் தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. அதன்படி , கவர்னரின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாகக் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில், நாளைக் கவர்னர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது. அ.தி.மு.க, சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் , பெஞ்சமின் ஆகியோர் கலந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *