Viluppuram: வெடிகுண்டு வீச்சு!

Advertisements

இளைஞர்மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு!

 விழுப்புரம்: விழுப்புரம் அருகே இளைஞர்மீது நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு 5 பேர் கொண்ட கும்பல் தப்பியோடியுள்ளது. முன்விரோதம் காரணமாக அப்பு என்ற இளைஞர்மீது அதே ஊரைச் சேர்ந்த நாராயணன் என்பவர் நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளார்.

நாட்டு வெடிகுண்டு வீசியதில் அப்புவின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விழுப்புரம் போலீசார் விசாரணை செய்து தப்பியோடிய நாராயணன் என்பவரைத் தேடிவருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *