மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத் வேட்பு மனு தாக்கல்!

Advertisements

இமாசல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை கங்கனா ரனாவத் இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

சிம்லா:பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்றுடன் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவு அடைந்துள்ளது. இதுவரை 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

இமாசல பிரதேசத்தின் மண்டி தொகுதிக்கான வாக்குப்பதிவு 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலில் நடக்கிறது. இதில் மொத்தம் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.கடைசி கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

இந்நிலையில், இமாசல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை கங்கனா ரனாவத் இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.ஏற்கனவே பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *