நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் MPs வலியுறுத்தல்.!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேட்டை கண்டித்து தலைநகர் டெல்லியில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதான் விலகினார்.

மேலும், நீட் உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

இந்த மசோதா சட்டமான பின்னர் தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவர்கள் மீதான தண்டனை, அபராதம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், நீட் தேர்வை ரத்த செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடளுமன்ற வளாகத்தில் பேன் நீட் என்ற பதாகையை ஏந்தி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *