
சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்தோனேசிய வீராங்கனை ஜேனிசுக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிக் கோப்பையையும் பரிசையும் வழங்கிச் சிறப்பித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.
இதில், இந்தோனேசியாவின் ஜேனிஸ் டிஜென் அபார வெற்றிபெற்றுச் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார். இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஜேனிஸ் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீராங்கனை கிம்பெர்லி பிரெலை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேசியாவின் ஜேனிசுக்கு 32 இலட்சம் ரூபாய் பரிசையும் வெற்றிக் கோப்பையையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பரிசளிப்பு விழாவில் துணை முதலைச்சர் உதயநிதி கலந்து கொண்டார்.



