Electrical leakage: மூச்சுத்திணறி தாய், மகள் பலி!

சென்னையில் ஏசியில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு தாய், மகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: அம்பத்தூர் அடுத்துள்ள மேனாம்பேடு இந்திரா நகரில் உள்ள வீட்டில் ஏசி ஆன் செய்து விட்டுத் தாய், மகள் நேற்று இரவு தூக்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வயர்களில் தீப்பிடித்ததால் கரும்புகை சூழ்ந்தது. இதனால், மூச்சு திணறல் ஏற்பட்டு  தாய் ஹாலினா (50) மற்றும் மகள் நஸ்ரியா(16) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அப்போது, கரும்புகை வெளியேறுவதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தப்போது தாய், மகளும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்து கிடந்தனர்.

இந்தத் தீ விபத்து தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகத் தாய், மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *