அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி அறிவிப்பு!

அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள், மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறஉள்ளது. வரும் 29, 30ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை இந்த கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் கலந்து கொண்வதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, நெல்லை, தென்காசி மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டதில் சட்ட சபை தேர்தல் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல்  வெளியாகிவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *