Advertisements

விழுப்புரம் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் நடவு செய்த நெல்லின் அறுவடை தொடங்கியுள்ளது. இதையொட்டி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இருந்தபோதிலும், ஒருசில இடங்களில் நெல் மூட்டைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன. இந்தப் புகார்கள்மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படம் என மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
Advertisements
