நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைந்தது ஏன்? பின்னணியில் பரபரப்பு அரசியல்! 

Advertisements
பிரபல தமிழ் நடிகை கஸ்தூரி திடீரெனத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து இருக்கிறார். வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவர் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாகத் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் இதுபற்றிய விரிவான செய்தியை இப்போது காணலாம்
நடிகை கஸ்தூரி சென்னையில் பிறந்து வளர்ந்தவர் அவர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்பொழுது பொது தேர்வில் பள்ளியில் முதல் மாணவியாகத் தேர்வானவர். அவருக்கு இப்போது 50 வயதாகிறது.இவரது கணவர் ரவிக்குமார் அமெரிக்காவில் டாக்டராக வேலை பார்க்கிறார் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த 1991 ஆம் ஆண்டு இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கிய ஆத்தா உன் கோவிலிலே என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துப் புகழ் பெற்றவர் கஸ்தூரி.கடந்த காலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாகப் பேசி வந்த நடிகை கஸ்தூரி தற்பொழுது நேரடியாகப் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து விட்டார்.ஏற்கனவே நடிகை குஷ்பூ நடிகர் சரத்குமார் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நிலையில் நடிகை கஸ்தூரியும் பாஜகவில் இணைந்த நிகழ்வு  முக்கியஅரசியல் களமாகப் பார்க்கப்படுகிறது.
சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தாலும் நடிகை கஸ்தூரி அவ்வப்போது அரசியல் ரீதியாகக் குரல் கொடுத்து வந்தார்.நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்தும் அவர் தனது கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.
நடிகை கஸ்தூரியை திமுகவினர் அடிக்கடி திட்டித் தீர்த்து வந்தனர். சமூக வலைத்தளங்களில் திமுகவினர் நடிகை கஸ்தூரிக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில்தான் அவர் திடீரெனப் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறும்பொழுது 79 ஆவது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லை பெண்களுக்குச் சுதந்திரம் இல்லை உயிர் வாழ்வதற்கு கூட வாய்ப்பு இல்லாத சூழல் இங்கு இருக்கிறது .சமீபகாலமாக நடந்த சம்பவங்கள் எனக்குக் கோபத்தை அதிகரித்துக் கொண்டே வந்தது
அரசியல் ரீதியாக நான் குரல் கொடுக்கும்பொழுது திமுகவினர் மற்றும் திமுக கூட்டணி கட்சியினரிடமிருந்து எனக்கு எதிர்ப்பலைகள் கிளம்பின குறிப்பாக என்னைச் சங்கி என்று விமர்சித்தார்கள். என்னைச் சங்கி சங்கி என்று சொல்லச் சொல்லத் திமுக எதிர்ப்பு என்பது பாஜக தான் என்று என் தலையில் அவர்கள் ஏற்றி விட்டார்கள் அதனால் தான் நைனார் நாகேந்திரனை சந்தித்து எனது மக்கள் பணியைச் சுதந்திரமாகச் செய்வதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கூறினேன் அதற்கு அவர் இதைத்தானே பல நாட்களாக நாங்கள் கேட்கிறோம் என்று கூறினார் எங்களின் சிந்தனை ஒரே நேர்கோட்டில் இருக்கிறது. நான் அரசியல் செய்யக் கூடாது என்று இருந்தேன். ஆனால் எனக்கு அரசியல் சாயம் பூசி விட்டார்கள் என்னைப் போன்று கட்சி சார்பு இல்லாமல் இயங்கும் பல்வேறு அமைப்புகளுக்கும் இவர்கள் கட்சி சாயம் பூசி விடுகிறார்கள்.
இதனால் அந்தப் பெயரைப் பெருமையாகவே சுமந்து விடலாம் என்று நினைத்துப் பாஜகவில் இணைந்து விட்டேன்.பிரதமர் மோடியின் ஆபரேஷன் சிந்துருக்கு பிறகு அவரது செயல்பாடுகளுக்கு ஆதரவாக ஒரு குடிமகளாக ஏதாவது ஒரு வகையில் பாஜகவுக்கு அணில் மாதிரி பணியாற்ற வேண்டும் எனத் தோன்றியது இதுவும் ஒரு முக்கிய காரணம் என்று அவர் கூறியிருக்கிறார்.
பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நடிகை கஸ்தூரிக்கு தேர்தல் பணி குழு சம்பந்தமாகப் பதவி வழங்கப்படும் எனத் தெரிகிறது
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *