அமெரிக்க அதிபர் டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை போரை நீட்டிப்போம் – ஈரான் எச்சரிக்கை!

Advertisements

அமெரிக்க அதிபர் டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை போரை நீட்டிக்க உள்ளதாக ஈரான் புரட்சிகரக் காவல்படைத் தலைமைத் தளபதியின் மூத்த ஆலோசகர் முகமது ரேசா நக்தி எச்சரித்துள்ளார்.

அமெரிக்கப் போர் தொடர்பாக ஈரான் புரட்சிகரக் காவல் படை தலைமைத் தளபதியின் மூத்த ஆலோசகர் முகமது ரேசா நக்தி அந்நாட்டின் ஊடகத்திற்கு பேட்டியளித்தார். அப்போது, பேசிய அவர், அமெரிக்க அதிபர் டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை போரை நீட்டித்து, அவர்களுக்குப் பெரும் இழப்புகளை ஏற்படுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.

 

இதன்மூலம் எதிர்காலத்தில் தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்த நினைக்கும் எவரும் அதற்குப் பெரும் விலை கொடுக்க நேரிடும் என்பதை உணர்ந்து கொள்வார்கள் என்று குறிப்பிட்டார். உலகம் முழுவதும் அமெரிக்காவிற்கு ஆயிரக்கணக்கில் பொருளாதார நலன்கள் உள்ள நிலையில் அவை அனைத்தையும் எளிதில் அழிக்க முடியும் என்று எச்சரிக்கை விடுத்தார். அமெரிக்க படைகள் சந்தித்து வரும் இழப்புகளால் போரை விரைந்து முடிக்க டிரம்ப் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *