திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் கப்பலோட்டிய தமிழன் சிதம்பரனார் சிலையை அரசு சார்பில் அமைக்க வலியுறுத்திப் பூவிருந்தவல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
பூவிருந்தவல்லி வட்டாட்சியரிடம் ஒன்றிய பாஜக தலைவர் பிரபாகரன் தலைமையில் மனு அளித்தனர். அதில் திருமழிசையில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் சிலையைத் தமிழக அரசு சார்பில் நிறுவ வேண்டும் என்று கோரியுள்ளனர். மனு அளித்த போது பாஜக மாவட்டப் பொதுச் செயலாளர் மணிகண்டன், ஆன்மீகப் பிரிவு மாவட்டத் தலைவர் உதயகுமார், மொரார்ஜி தேசாய், சந்தானம், சாத்தியப்பன், அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



