Heavy Rain: 37 விமானங்கள் தாமதம்.!

சென்னை: தொடர் மழை காரணமாகச் சென்னை விமான நிலையத்திலிருந்து 37 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன. தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் 27ம் தேதிவரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய 15 சர்வதேச விமானங்கள் உள்பட 37 விமானங்கள் சுமார் அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரத்துக்கு மேல் தாமதம் ஏற்பட்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்து வருவதால், விமான பயணிகளின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுகிறது. இதனால் சில விமானங்களின் சேவை ரத்து செய்யவும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *