
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் நடிக்கும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் ‘லெனின் பாண்டியன்’ என்ற புதியப் படத்தில் கதாநாயக அறிமுகாகியுள்ளார்.
இயக்குநர் டி.டி.பாலச்சந்திரன் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தில், கங்கை அமரன், ரோஜா, ஷ்ரீதா ராவ், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கங்கை அமரன் முதியவர் தோற்றத்திலும் தர்ஷன் கணேசன் காவலர் உடையில் இருக்கும் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இப்படம் இளையராஜா இசையில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ள நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.



