
சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரு சவரன் ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து, 13 ஆயிரத்து 670 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், ஒரு சவரன் 800 ரூபாய் குறைந்து, ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கம் ஒரு சவரன் 1 இலட்சத்து 19 ஆயிரத்து 304 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், ஒரு கிராம் வெள்ளி 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகம் இன்று சரிவுடன் காணப்படுகிறது. மும்பைப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து 636 புள்ளிகள் குறைந்து, 71 ஆயிரத்து 947 புள்ளிகளில் வணிகமாகிறது.
தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீட்டு எண் நிஃப்டி 488 புள்ளிகள் குறைந்து, 22 ஆயிரத்து 331 புள்ளிகளில் வணிகமாகிறது..


