Advertisements

அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: சட்ட விரோத பணப்பரிவர்த்தனை புகார் தொடர்பாக 30-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பி இருந்தனர்.
இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜரானார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisements


