திரைப்படத்திற்காக தான் எல்லாமே – நடிகர் சர்வானந்த்.!

பைக்கர்’ திரைப்படத்திற்காக தான் 20 கிலோ எடையை குறைத்துள்ளதாக நடிகர் சர்வானந்த் தெரிவித்துள்ளார்.

தமிழில் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் அறிமுகமான சர்வானந்த், தற்போது இயக்குனர் அபிலாஷ் ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள பைக்கர்’ படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் ராஜசேகர், பிரமாஜி மற்றும் மாளவிகா நாயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, நடிகர் சர்வானந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, எங்கேயும் எப்போதும்’ முதல் ‘கணம்’ வரை தமிழ் ரசிகர்களுடன் தனக்கு எப்போதும் நெருக்கமான உறவு உள்ளது என்று கூறினார்.

‘பைக்கர்’ திரைப்படம் மிகவும் தனித்துவமானது என்றும் இதுவரை நடித்த படங்களில் சிறந்த படம் இதுதான் என்றும் குறிப்பிட்டார். இந்தக் கதாபாத்திரத்திற்காக தான் 20 கிலோ எடையை குறைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *