
கானா பாடகர் தினேஷ் தனது பாடலை அனுமதி இன்றி ‘யூத்’ திரைப்படத்தில் பயன்படுத்தியதாகக்கூறி நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை முகப்பேரைச் சேர்ந்த கானா பாடகர் தினேஷ், தனது பாடலை அனுமதி இன்றி ‘யூத்’ திரைப்படத்தில் பயன்படுத்தியதாகக்கூறி நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, ஆசைப்பட்ட பொண்ணு பேரு மோனிஷா என்ற தனது பாடல் 12 வருடத்திற்கு முன்னால் பாடப்பட்டு மிகவும் பிரபலமாக இருந்தது என்றும் இந்தப் பாடலை கருணாஸ் மகன் கென் நடித்து புதிதாக வெளியாகி உள்ள யூத் படத்தில் தனது அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டினார். கென் அரசியல் பிரமுகரின் வாரிசு என்பதால் தனக்கு உயிர் மாய்த்துவிடுவதாகக் கூறி மிரட்டல் வருமா என்ற அச்சம் உள்ளது என்று கூறினார். கென் தனது பாடலை பாடி பயன்படுத்திருப்பதால் வாழ்வாதாரமும் அடையாளமும் பறிபோய்விட்டது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்தார். இதையடுத்து, தனக்கான உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.



