சாதி, மதம் அற்ற அரசின் சான்றிதழை பெறுவதற்கு முயற்சி -பார்த்திபன் Open Talk..

சாதி, மதம் அற்றவன் எ‌‌ன்ற அரசின் சான்றிதழை பெறுவதற்கு முயற்சி எடுத்து வருவதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

நடிகர் பார்த்திபன் நிகழ்ச்சி ஒன்றில் தனது ஜாதி பற்றி பேசியது கடும் விமர்சனத்துகுள்ளானது. இதையடுத்து, நடிகர் பார்த்திபன் தனியார் இணையதளத்தில் வீடியோ ஓன்றை வெளியிட்டுள்ளார். அதில், மனதளவில் தான் ஜாதியில்லை மதமில்லை என்று உறுதியாய் இருப்பவன் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய பார்த்திபன், சாதி, மதம் அற்றவன் எ‌‌ன்ற அரசின் சான்றிதழை பெறுவதற்கு பெரும் முயற்சி எடுத்து வருவதாகத் தெரிவித்தார். விரைவில் தனக்கொரு சான்றிதழ் கிடைக்கும் என்று நம்பிக்கையிடன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *