IPL Match : ராயல் சேலஞ்சர்ஸ் VS சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இன்று மோதல்.!

Advertisements

பெங்களூருவில் நடைபெறும் 19 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் இன்று மோத உள்ளன.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 19 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று கோலகலமாக தொடங்குகிறது. இத்தொடரில், சென்னை,மும்பை, கொல்காத்தா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இன்று முதல் தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் விளையாட உள்ளன. பெங்களூரு அணியில் விராத் கோலி, ஜோஷ் ஜோஷ் ஹேசில்வுட் உள்ளிட்ட முக்கிய வீரர்களும் ஐதராபாத் அணியில் ஈஷான் கிஷன், அபிஷேக் ஷர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். முக்கிய வீரர்கள் களம் காணும் இப்போட்டியில் அதிரடி ஆட்டங்களை காண கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *