அன்புமணி மீதான கேள்விக்கு ராமதாஸ் பாட்டுப் பாடிப் பதில்.!

அன்புமணி மீதான ஒழுங்கு நடவடிக்கைக் குழு தொடர்பான கேள்விக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் போகப் போகத் தெரியும் என்று பாட்டுப் பாடிப் பதிலளித்துள்ளார்.

கடலூரில் நடைபெற்ற ஐபிஎஸ் அதிகாரியின் திருமண விழாவில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டார். அப்பொழுது மணமக்களை வாழ்த்திப் பேசிய அவர், பெண்கள் நம் நாட்டின் கண்கள் அவர்கள் இல்லை என்றால் நாம் யாரும் கிடையாது எனத் தெரிவித்தார்.

அதன்பின் ராமதாசிடம், அன்புமணி மீதான ஒழுங்கு நடவடிக்கைக் குழு குறித்துச் செய்தியாளர்கள் வினவினர். அதற்குப் போகப்போகத் தெரியும் என்று பாட்டுப் பாடி ராமதாஸ் பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *