போரை முடிக்கின்ற வழியைப் பாருங்க.! டிரம்புக்கு தலைமைத் தளபதி அழுத்தம்.!

Advertisements

உலக அரசியல்ல செய்திகளுக்கு பஞ்சமே இல்லைங்க.. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடக்குற போர் நாளுக்கு நாள் ரொம்ப விபரீதமான ஒரு கட்டத்தை நோக்கிப் போயிட்டு இருக்கு. ஆனா, இந்த சண்டையால இப்போ கலங்கிப் போய் நிக்கிறது ஈரான் மட்டும் கிடையாது…அமெரிக்காவும் தான்..!

“டிரம்பே… போதும் நிறுத்துங்க இந்த சண்டையை!” அப்படின்னு அமெரிக்காவோட உச்சபட்ச ராணுவத் தளபதியே இப்போ பகிரங்கமா போர்க்கொடி தூக்கியிருக்காரு. மேலும், உலக வர்த்தகத்தையே மொத்தமா முடக்கி வச்சிருக்கிற ஹார்மூஸ் நீரிணையை அமெரிக்கா ஒரு பக்கம் திறன்னு சொல்ல , மற்றொரு பக்கம் ஈரான் ஹார்முசை திறக்கணும்னா நாங்கள் போட்டுள்ள 6 அதிரடியான கண்டிஷன்களுக்கு நீங்கள் ஒதுத்துக்கம்னு சொல்றாங்க…தற்பொழுது மத்திய கிழக்கில் நடைபெறும் அரசியல் மற்றும் போர் சூழல் குறித்து பார்க்கலாம்..!!

அமெரிக்கா – ஈரான் போர் இப்போ ஒரு முக்கியமான திருப்புமுனையை எட்டியிருக்கு. அமெரிக்கா நினைச்ச மாதிரி வான்வழித் தாக்குதல்களை நடத்தி ஈரானை ஈஸியா மடக்கிடலாம்னு பார்த்தா… அதெல்லாம் இப்போ கைக்கு எட்டல, ரொம்பவே கைமீறிப் போயிட்டு இருக்கு. அமெரிக்கக் கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதியான ஜெனரல் டான் கெய்ன் இருக்காரில்லையா? அவர்தான் இப்போ சிஎன்என் ஊடகத்துல சில அதிரடித் தகவல்களை வெளிப்படுத்தியிருக்காரு.

அவரோட வாதம் என்னன்னா—”டிரம்பே! நீங்க நினைக்கிறது பச்சையான தப்பு. சும்மா வான்வழித் தாக்குதலை மட்டும் வச்சு ஈரானை ஒண்ணுமே பண்ண முடியாது. நம்மகிட்ட இருக்கிற ஆயுதக் குடோன்ல வெடிமருந்துகள் எல்லாம் இப்போ வேகமா குறைஞ்சுகிட்டு வருது. போரை இன்னும் நீட்டிச்சோம்னா, நம்ம ராணுவ வீரர்களுக்கும் பெருத்த இழப்பு ஏற்படும். இது நமக்குத்தான் பலத்த பின்னடைவு!” அப்படின்னு ரொம்ப ஓப்பனாவே எச்சரிச்சிருக்காரு.

ஆனா, டிரம்ப்போட மைண்ட்செட்டே வேற மாதிரி இருக்கு. “ஈரானுக்குள்ள தரைப்படை வீரர்களை மட்டும் அனுப்பவே கூடாதுடா சாமி” அப்படின்னு ரொம்ப உஷாரா இருக்கிற அவர், வான்வழித் தாக்குதலை வச்சே ஈரானை மண்டியிட வைக்கலாம்னு பிளான் பண்றாரு. ஆனா, தளபதி டான் கெய்னோ, “இது செட்டே ஆகாது பாஸ், வழியைப் பார்த்துக் கிளம்புங்க”ங்கிற மாதிரி மாற்று வழிகளைத் தேட ஆரம்பிச்சிட்டாரு.

இது சம்பந்தமா சிஐஏ இயக்குநர் ஜான் ரட்க்ளிப், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, துணை அதிபர் ஜே.டி. வன்ஸ் இவங்க எல்லார்கிட்டயும் கெய்ன் தீவிரமா பேசிட்டு வராரு. ஒரு வெள்ளை மாளிகை மீட்டிங்ல டிரம்ப் கிட்டயே பேசின கெய்ன், “வேணுமின்னா சொல்லுங்க, ஈரானை நம்மால ஒண்ணுமே இல்லாம ஆக்க முடியும். ஆனா அதுக்கு விலை ரொம்ப அதிகம்” அப்படின்னு கறாராவே சொல்லிட்டாராம்! அதேநேரம், டிரம்போட கோபத்துக்கு ஆளாகிடக் கூடாதுன்னு ரொம்ப கவனமாவும் பார்த்துக்கிறாராம் மனுஷன்.

மறுபக்கம் கடல் வழி வர்த்தகத்துல உலகமே நடுங்குகிற ரொம்ப முக்கியமான ஹார்மூஸ் நீரிணையை ஈரான் இப்போ தற்காலிகமா மூடிட்டாங்க.. அமெரிக்கத் தரப்போ, “டேய், அந்த வழியா போற கப்பல்கள்கிட்ட நாங்க ஒன்னும் கட்டணம் வசூலிக்கப் போறது இல்லப்பா… அங்க இருக்கிற கிளர்ச்சிகளும்தான் தாக்குதலை நிறுத்தணும்” அப்படின்னு துணை அதிபர் ஜே.டி. வன்ஸ் மூலமா ஈரான்கிட்ட பேசிப் பார்த்தாங்க. ஆனா, ஈரான் சளைக்கல. “ஹார்மூஸ் நீரிணையை நாங்க திறக்கணும்னா, எங்ககிட்ட நீங்க 6 கண்டிஷன்களை ஏற்கணும்”னு செம செக் வச்சிருக்காங்க.

அவங்க வச்ச அந்த 6 அதிரடி நிபந்தனைகள் என்னென்ன தெரியுமா?

முதல் கண்டிஷன்: ஈரான் மீதும், எங்களோட புனிதத்தன்மை மீதும் அமெரிக்கா நடத்தி வரும் அச்சுறுத்தல்களை உடனே நிறுத்தணும்!

இரண்டாவது கண்டிஷன்: ஈரானுக்கும், எங்களோட பிராந்திய நட்பு நாடுகளுக்கும் எதிரா நீங்க நடத்திட்டு வர்ற ராணுவ நடவடிக்கைகளை நிரந்தரமா கைவிடணும்!

மூன்றாவது கண்டிஷன்: ஈரானுக்கு எதிரா நங்கூரமிட்டுள்ள அமெரிக்காவின் கப்பற்படை மற்றும் விமானப்படையின் தாக்குதல்களையும், முற்றுகையையும் முழுசா திரும்பப் பெறணும்!

நான்காவது கண்டிஷன்: இதுவரைக்கும் இந்தப் போரால் ஈரானுக்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த இழப்புகளுக்கும் அமெரிக்காதான் நிவாரணத் தொகையா இழப்பீடு வழங்கணும்!

ஐந்தாவது கண்டிஷன்: அமெரிக்கா நம்ம மீது விதிச்சிருக்கிற ஒட்டுமொத்த பொருளாதாரத் தடைகளையும் (Economic Sanctions) உடனடியாகத் தூக்க mesti!

ஆறாவது மற்றும் கடைசி கண்டிஷன்: அமெரிக்க வங்கிகள்ல முடக்கி வச்சிருக்கிற ஈரானோட அத்தனை சொத்துகளையும் உடனே விடுவிக்க வேண்டும்!

இந்நிலையில் , இந்த கண்டிஷன்ஸ்கள் குறித்து , மத்திய கிழக்கு வியூக ஆய்வுகள் மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் அபாஸ் அஸ்லானி என்ன சொல்றாருன்னா—”ஈரானின் நிலைப்பாடு ரொம்ப தெளிவா இருக்கு. அமெரிக்கா மாதிரி இன்னைக்கு ஒரு பேச்சுப் பேசிட்டு, நாளைக்கு திடீர்னு பிளானை மாத்திட்டு தாக்குதலைத் தொடங்கக் கூடாது. பேச்சுவார்த்தைன்னா அது நிலையா இருக்கணும். அமெரிக்கா ஒருமுறைக்கு ரெண்டுமுறை யோசிச்சு முடிவு எடுக்கணும்” அப்படின்னு எச்சரிச்சிருக்காரு.

உண்மையிலேயே சொல்லப்போனா, இந்த யுத்தத்தால இரு நாடுகளுக்குமே பெரிய அளவில் இழப்புகள் ஏற்பட்டுட்டு இருக்கு. உலகத்துல பெட்ரோல் விலை முதல் கொண்டு பொருளாதார வர்த்தகம் வரை எல்லாமே செமயா அடிவாங்கிட்டு இருக்கு. அமெரிக்க ராணுவத் தளபதியே போரை நிறுத்தச் சொல்லி அழுத்தம் கொடுத்துட்டு வர்ற இந்தச் சூழலில், டிரம்ப் என்ன செய்யப் போறார்? ஈரான் வச்ச 6 கண்டிஷன்களுக்குப் பணிகிறாரா அல்லது போரை இன்னும் தீவிரப்படுத்தப் போறாரான்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும்!

இந்த நிலவரம் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க.. ஈரானோட இந்த நிபந்தனைகள் நியாயமானதா? இல்ல அமெரிக்கா இதுக்கு வளைந்து கொடுக்குமா? உங்களோட கருத்துக்களை மறக்காம கமெண்ட் பாக்ஸ்ல பதிவிடுங்க..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *