Drug Smuggling Case: போதைப்பொருள் கடத்தல் மன்னன் கைது!

Advertisements

சென்னை: ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பு போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ராஜஸ்தான் மாநில ஜெய்ப்பூரில் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.மேலும் ஜாபர் சாதிக்கை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல வெளியாகியுள்ளது.

சென்னை சாந்தோம் அருளானந்தம் தெருவில் வசிப்பவர் ஜாபர் சாதிக்(36). தி.மு.க., வில் னெ்னை மேற்கு மாவட்ட அயலக துணை அமைப்பாளர் ஆக இருந்தார். 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக, ஜாபர் சாதிக்கை போலீசார் தேடி வந்தனர். தலைமறைவான அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. அவர் வெளிநாடுகளுக்கு தப்பிவிடாமல் தடுக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இரண்டு வாரத்திற்கும் மேலாகத் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர், எங்கு வைத்துச் செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. பிற்பகல் 2 மணிக்கு நிருபர் சந்திப்பு நடைபெற உள்ளதாகவும், அப்போது அனைத்து விவரங்களும் கூறப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் ஜாபர் சாதிக்கை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல வெளியாகியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *