
தனது நடிப்பால் மக்களின் மனங்களை வென்றவர் விஜயகாந்த் என்று பிரதமர் மோடி கூறினார்.
தமிழ்நாட்டிற்கு ரூ.19 ஆயிரத்து 850 கோடியில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, எனது தமிழ் குடும்பமே… துடிப்பான தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டால் இந்தியா பெருமைபடுகிறது. எனக்கு நிறைய தமிழ் நண்பர்கள் உள்ளனர்.
நான் தமிழ் கலாச்சாரம்குறித்து நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். உலகில் எங்குச் சென்றாலும் தமிழ்நாடு குறித்து என்னால் பேசாமல் இருக்கமுடியவில்லை. நாட்டிற்கு தமிழ் பண்பாடு கொடுத்த நல்லாட்சி முறையை உத்வேகமாகக் கொண்டு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் புனிதமான செங்கோல் நிறுவப்பட்டுள்ளது’ என்றார்.
பின்னர் விழாவில் மறைந்த தே.மு.தி.கத்தலைவர் விஜயகாந்த் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது:-
“தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். 2023 ஆம் ஆண்டு இறுதியில் தமிழக மக்கள் அதிக வலிகளை அனுபவித்துள்ளீர்கள். ‘சினிமா மட்டுமல்ல, அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன்தான். தனது நடிப்பால் மக்களின் மனங்களை வென்றவர் விஜயகாந்த்.
திரைப்படங்களில் அவரது செயல்பாடுகள் மக்கள் உள்ளங்களில் நிலை கொண்டுள்ளது. விஜயகாந்த் மறைவு திரைத்துறைக்கு மட்டுமல்ல; அரசியலுக்கும், மக்களுக்கும் பெரும் இழப்பு. அரசியல்வாதியாகத் தேசிய நலனை முன்னிறுத்தினார் விஜயகாந்த். அனைத்தையும் விடத் தேசத்தை விஜயகாந்த் அதிகம் நேசித்ததார்” என்று பிரதமர் மோடி கூறினார்.

