சசிகலா கூறிய கருத்தை வரவேற்பதாக பன்னிர்செல்வம் தெரிவிப்பு..!

அதிமுக ஓரணியில் இணைய வேண்டும் என சசிகலா கூறிய கருத்தை வரவேற்பதாகப் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நெற்கட்டும்செவலில் பூலித்தேவரின் பிறந்த நாள் விழாவில் அவர் உருவச் சிலைக்குப் பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைத்துச் சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்று சசிகலா கூறிய கருத்தை வரவேற்பதாகத் தெரிவித்தார்.

பிரிந்து கிடக்கும் சக்திகளை ஒன்று சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாகவும், அனைத்துத் தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செல்லவிருப்பதாகவும் பன்னீர்செல்வம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *