
நடிகை ரம்யா பாண்டியன் கடற்கடையில் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சிமூலம் திறமையான மற்றும் தைரியமான பெண் என்பதை நிரூபித்த ரம்யா பாண்டியன், தற்போது வரை தன்னுடைய நடிப்பு திறமைக்குத் தீனி போடும்படியான கதாபாத்திரத்திற்காகக் காத்திருக்கிறார்.
அந்த வகையில் தற்போது ரம்யா பாண்டியன், மலையாள சூப்பர் ஸ்டார் மமூட்டிக்கு ஜோடியாக நடித்த ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படம் மோசமான தோல்வியைத் தழுவியது.
இவர் அடுத்ததாக மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் ‘இடும்பன்காரி’. இந்தப் படத்தில் இதற்க்கு முன் இவர் நடித்த படங்களின் கதாபாத்திரத்தைவிட, வலுவான ரோலில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் இவருக்குத் தினமும் பல இயக்குனர்கள் படையெடுத்து வந்து கதை கூறி சென்றாலும்… தன்னுடைய மனதிற்கு திருப்திகரமாக இருக்கும் கதைகளையும், கதாபாத்திரங்களை மட்டுமே ஏற்று நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.
அதே போல் திரைப்படங்களில் கவர்ச்சி காட்டவும் தயாராகியுள்ள ரம்யா பாண்டியன்… இதனைத் தன்னுடைய போட்டோ ஷூட் மூலம், சூசகமாகத் தெரிவித்து வருகிறார்.
எங்குச் சென்றாலும் அங்கிருந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் ரம்யா பாண்டியன், தற்போது மிதமான மேக்கப்பில், கடற்கடையில் தன்னுடைய தாவணியை பறக்கவிட்டு காத்துவாக்கில் வெளியிட்டுள்ள கலக்கல் போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.


