
எண் மண் என் மக்கள் பாதையாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வரும் 27ஆம் தேதி தமிழகம் வருகைதர உள்ளதாகச் சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை தெரிவித்தார்.
டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற பிறகு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அதன்பின் செய்தியார்களை சந்தித்து பேசிய அவர்.
இரண்டு நாட்கள் டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவில் உள்ள 1700க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இரண்டு முக்கிய தீர்மானங்கள் கூட்டத்தில் நடைபெற்றது. 2047 இலக்கு வளர்ச்சி அடைந்த பாரதம்.
எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியல் எனவும், சிறப்பு தீர்மானமாக ராமர் கோயில் கட்டிட திறப்பிற்கு சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு நன்றி சொல்லித் தீர்மானம் நிறைவேற்றபட்டது.
27 ஆம் தேதி பிரதமர் மோடி என் மன் என் மக்கள் பாதை யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காகத் தமிழகம் வருகை தருகிறார். 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் மோடி கலந்து கொள்கிறார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகைக்கு எனது வாழ்த்துக்கள்.
தமிழக மக்கள் நலனுக்காக முன்னேற்றத்திற்காகவும் நல்லது செய்யலாம். அரசியல் கட்சி வேறு பெயராக இருந்தாலும் கூட அடிப்படை பணி ஒன்றுதான்.2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டு சப்பு கட்டு கட்டுவதற்காக EVM மூலமாகப் பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டாரெனக் குற்றம் சாட்டுகிறாரென அண்ணாமலை தெரிவித்தார்.


