யுஜிசி புதிய விதிகள் அரசியல் சட்டத்துக்கு எதிரானது – மஹுவா மொய்த்ரா!

Advertisements

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாகப் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) சமீபத்தில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

அதில் துணை வேந்தர்களை நியமனம் செய்யக் கவர்னருக்கே அதிகாரம் உண்டு. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழு தலைவராகக் கவர்னர் பரிந்துரைப்பவரும், உறுப்பினராக யுஜிசி பரிந்துரைப்பவரும் இருப்பார்கள்.

மற்றொரு உறுப்பினராகப் பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவர் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் புதிய விதிமுறையால் மாநில அரசு பரிந்துரைக்கும் உறுப்பினர் இனி இடம்பெற முடியாது என்பது உறுதியாகி உள்ளது.

இந்த மாற்றங்கள் துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசின் உரிமையை மறுக்கிறது.

அதனால் யுசிஜி புதிய விதிகளின் வரைவு அறிக்கையைத் திரும்ப வேண்டும் எனத் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மக்களவையில் யுஜிசி புதிய விதிகளின் வரைவு அறிக்கையை விமர்சித்துப் பேசினார்.

இது தொடர்பாக மக்களவையில் மஹுவா மொய்த்ரா கூறியது,

  • புதிய விதிகள் அரசியல் சட்டத்துக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கும் விரோதமானவை.
  • ஒன்றிய அரசின் கைகளில் அதிகாரத்தைக் குவிக்க புதிய வரைவு விதிகளை வகுத்துள்ளது யுஜிசி.
  • புதிய வரைவு விதிகளில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான தேடுதல் குழு அமைக்கும் நடைமுறையை மாற்ற முயற்சிக்கின்றனர்.
  • துணைவேந்தர் தேடுதல் குழுவில் மாநில அரசின் பிரதிநிதிக்குப் புதிய விதிகள் இடமளிக்கவில்லை.

இவ்வாறு மஹுவா மொய்த்ரா மக்களவையில் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *